தகுதி அற்றவர்களே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளனர்: அனுரகுமார!

Monday, August 7th, 2017

கடந்த ஆட்சியில் கொள்ளையடித்தவர்களே இன்று அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கூட்டு எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் வேடிக்கையானது. ரோஹித்த அபேகுணவர்தன, காமினி லொக்குகே, மகிந்தானந்த அளுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, எஸ்.எம்.சந்திரசேன, விமல் வீரவங்ச போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் கொள்ளையடிப்புக்களில் ஈடுபட்டவர்கள். கொள்ளையடித்தவர்கள் இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளமையே வேடிக்கையானது” என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

Related posts: