டைனமட் வெடித்ததில் ஒருவர் பலி” மற்றொருவர் படுகாயம் – கிண்ணியாவில் சம்பவம்!

திருகோணமலை, கிண்ணியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் டைனமற் வெடி மருந்து வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் இடம் பெற்றுள்ள இச்சம்பவத்தில் மீன் பிடிக்காக டைனமற் வெடி தயார் செய்யும்போது டைனமற் வெடித்து சிதறியதில் அதனைத் தயார் செய்தவர் உட்பட இருவர் படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெடிப்புச் சம்பவத்தின்போது கிண்ணியா இடிமன் -5 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய செயினுலாப்தீன் நவாஸ் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். மற்றொருவரான கிண்ணியா, பெரியாற்றுமுனையை சேர்ந்த ஜௌபர் ரிசான் (வயது-26) என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
Related posts:
|
|