டெல்டா வைரஸ் பரவல் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை!

டெல்டா வைரஸ் பரவலானது, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என்று ஒளடத உற்பத்திகள், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெல்டா வைரஸ் மாத்திரமின்றி, புதிய நிலைமாறிய வைரஸ்கள் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் டெல்டா தொற்றின் தாக்கம் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
இதேவேளை
சமூகத்தில் 300 டெல்டா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது மிகவும் எச்சரிக்கை மிக்கதும் அபாயம் மிக்கதுமான நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தொற்றாளர்கள் நாட்டில் ஒரு பிரதேசத்தில் மாத்திரமின்றி பல இடங்களிலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|