டெங்கு நோய் பரவும் அபாயம் – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை!
Friday, June 26th, 2020
சமூகத்தில் கட்டுமாணப் பணிகள் இடம்பெறும் இடங்களில் டெங்கு நோய் தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கட்டுமாணப் பணிகள் இடம்பெறும் இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து இந்த பகுதியில் டெங்கு நோய் பரவுவதற்கான 75 வீத சாத்தியகூறுகள் காணப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு நோய் தொற்று ஏற்ப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் இதனால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது!
ஐந்து தடயவியல் கணக்காய்வுகளும் பூரணப்படாது - சபாநாயகர் கரு ஜயசூரிய!
யாழ் மாவட்ட பாடசாலைகள் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படும்!
|
|
|


