டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

Saturday, November 26th, 2016

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் தொடர் மழையினால் டெங்கு நோயாளர் தொகை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியமுள்ளதாகவும் கடந்த பத்து மாதக்காலப்பகுதியில் 46236 டெங்கு நோயாளர்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் அதிக தொகையிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இணங்காணப்பட்டுள்ளதாகவும்  அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 10 மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலும் 46236 டெங்கு நோயாளர்கள்  பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14132 டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 5911 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 3052 கண்டியில் 3714 பேரும் காலி மாவட்டத்தில் 2271 பேரும்  டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1973 பேரும் குருணாகலையில் 2242 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 2729 மற்றும்  கேகாலையில் 1340 பேரும் டெங்கு நோயாளர்களாக இணங்காணப்பட்டுள்ளனர் என அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016_10_largeimg23_Oct_2016_080619637

Related posts: