டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

Wednesday, May 30th, 2018

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இல்லாதொழிக்க நாடளாவிய ரீதியில்  அடுத்த மாதம் 7ம் திகதி முதல் 8ம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்புத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தசுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இது 70 சதவீத வீழ்ச்சியாகும் என அந்த இயக்கத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹசித திசேரா தெரிவித்தார். எனினும் கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாக புத்தளம்  மட்டக்களப்புகல்முனை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் வாரத்திற்கு சுமார் 500 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு இயக்கத்தின் டொக்டர் திசேரா தெரிவித்தார்.

Related posts:

யாழ்ப்பாணத்தில் பாரிய வெடிப்பு சத்தம் - பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என இராணுவ ஊடகப்பேச்சாளர் அறி...
கொராரோனா வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அற...
பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரிப்பு - சுகாதார அமைச்சின் செயலாளர...