டெங்கு ஒழிப்பு தொடர்பான தேசியக் கொள்கை சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு!
Monday, January 9th, 2017
டெங்கு ஒழிப்பு தொடர்பான தேசியக் கொள்கை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் தேசிய இணைப்பாளர் வைத்தியர் ஹசித திசேராவினால் குறித்த கொள்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே குறித்த திட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.
டெங்கு என்பது நாட்டின் சுகாதாரத் துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முக்கிய தொற்று நோயாகவுள்ளது. இதேவேளை, இந்த நோய் ஏற்பட்டவர்களை பாதுகாக்க, சிகிச்சை பிரிவை பலப்படுத்துதல் மற்றும் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல் போன்றன மிக முக்கிய செயற்பாடுகள் என, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

Related posts:
சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் பொலிசாரால் கைது!
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை விஜயம் - கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் அவதானம் ...
உலக சுற்றாடல் தின நிகழ்விற்கான நிதி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
|
|
|


