டெங்கு ஒழிப்பு : கைவிடப்பட்ட படகுகள் அகற்றல்

Thursday, May 18th, 2017

மீன்பிடித் துறைமுகங்களில் கைவிடப்பட்டுள்ள படகுகளில் டெங்கு நுளம்புகள் பரவாத வகையில் அங்கிருந்து அகற்றுமாறு கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் துறைமுகங்களுக்கு அருகில் பயன்படுத்தப்படாத 106 படகுகள் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பயன்படுத்தப்படாத கைவிடப்பட்ட படகுகள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
கைவிடப்பட்ட படகுகளில் நீர் தேங்கி நிற்பதால், டெங்கு நுளம்புகள் உருவாகும் வாய்ப்பு காணப்படுகிறது.இதனால், இந்தப் படகுகளை அழிக்குமாறு அல்லது டெங்கு நுளம்பு குடம்பிகள் உருவாகாத வகையில் அவற்றை பாதுகாக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

Related posts: