டெங்கு ஒழிப்பில் மக்கள் பங்களிப்பு மிக அவசியம் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்று பரவும் அபாயம் தோன்றியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என கிழக்குமாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் கே.முருகானந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது;
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் தோன்றியுள்ளது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. பொது மக்கள் கழிவுப் பொருள்களையும், வீட்டின் கழிவு நீரையும் சரியான முறையில் அகற்றாமையாலேயே இந்த நிலமை தோன்றியுள்ளது. இந்தக் கழிவுகளை உரிய முறையில் அகற்றி நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே டெங்கு நுளம்பு பரவும் அபாயங்களிலிருந்து நாம் தப்பிக்கமுடியும்.
டெங்குநுளம்புகளைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளால் மட்டும் இயலாது. பொதுமக்கள் அவர்களின் முற்றுமுழுதான பங்களிப்பை வழங்க வேண்டும். அதற்கான சகல அறிவுறுத்தல்களையும், பங்களிப்புக்களையும் சுகாதாரத் திணைக்களம் பக்க பலமாக இருந்து வழங்கும் என்றார்.
Related posts:
|
|