டெங்கின் தாக்கம் அதிகரிப்பு: கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒருவர் பலி!

Tuesday, June 5th, 2018

கிளிநொச்சி உழவனூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தருமபுரம், உழவனூர் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்றிருந்த இவருக்கு ஐந்து நாட்களாக நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தாகவும் பிரதேசத்திலுள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் சிகிச்சை பெற்றதாகவும் தெரியவருகிறது.

அவ் வைத்தியர் வழங்கிய ஆலோசனைப்படி காய்ச்சல் குறையாத நிலையில் அரசாங்க வைத்தியசாலைக்கு உடனடியாக செல்லுமாறு பணித்திருக்கிறார். அவர் அவ்வாறு சென்றிருந்தால் இவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாகக் குறைவடைந்தமையும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவிக்கும் பிரதேச மக்கள், மீண்டும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் இடம்பெற உரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேசிய தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் இணையத்தளத்திலுள்ள தரவுகளின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் இதுவரை 126 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எண்ணிக்கையின் அடிப்படையில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமானது மூன்றாவது இடத்தில் உள்ளதாக அறியமுடிகிறது.

Related posts: