ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக பாதுகாப்புச் செயலாளர் நியமனம்..?
Sunday, May 21st, 2017
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்பள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாசேன ஹெட்டியாரச்சியை குறித்த பதவிக்கு நியமிப்பதற்காக தற்சமயம் ஜேர்மனிய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றும் கருணாதிலக அமுனுகம தனது பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாசேன ஹெட்டியாரச்சி கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் திகதி முதல் பாதுகாப்புச் செயலாளர் பதவி வகிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
கிளிநொச்சியில் இம்மாத இறுதியில் காணமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை.
நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்தது - சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை!
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் நபர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு மத்திய வங...
|
|
|


