ஜப்பான் – பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து மீண்டும் நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.
அத்துடன், ஜப்பானிய பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்து பேசியிருந்தார்.
அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிலிப்பைன்ஸிற்கு சென்றிருந்தார்.
இந்தநிலையிலேயே ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
இலங்கையர்களின் குரல்களாகவே நாங்கள் இருக்கின்றோம் - சர்வதேச நாடாளுமன்ற தின செய்தியில் சபாநாயகர் மஹிந்...
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம்...
|
|