ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகத்தை அகற்ற நடவடிக்கை!

Friday, May 13th, 2016

ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் உட்பட அரச திணைக்களங்கள் பலவற்றை கொழும்பிலிருந்து அகற்றி நாடாளுமன்றத்திற்கு அருகே நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு துறைமுகம் மற்றும் பேரே வாவியை அண்டிய பகுதிகளை வர்த்தக நகரமாக மாற்றும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது குறித்த தகவல்களை  தரிவித்த அமைச்சர்  தொடர்ந்து உரையாற்றுகையில்.

ஜனாதிபதி செயலகம் பிரதமர் அலுவலகம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் காரியாலயங்கள், அனைத்தும் பத்தரமுல்லை “அப்பேமை” வளாகத்திற்கு அண்மித்த காணிகளில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

தற்போது கொழும்பு நகரில் 31 அமைச்சுகள், 50 திணைக்களங்கள், 32 அரச நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை தவிர ஏனைய அனைத்தும் கொழும்பிற்கு வெளியே கொண்டு செல்லப்படவுள்ளன.

கொழும்புத் துறைமுகம் மற்றும் பேரே வாவி அண்டிய பிரதேசங்கள் வர்த்தக நகரமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதனோடிணைந்த சில அரச நிறுவனங்கள் மட்டும் அங்கே தொடர்ந்தும் இயங்கவுள்ளன. கொழும்பு மாநாகர திட்டத்திற்கமைய இந்த வேலைத்திட்டம் 5 – 10 வருட காலங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் சம்பிக தெரிவித்துள்ளார்

Related posts: