ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!

Friday, July 15th, 2016

 

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஆவணங்களை தயாரிப்பதற்காக சிறிது காலம் ஆணைக்குழுவின் அலுவலகத்தை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்..

காணாமற்போனோர் தொடர்பிலான சாட்சி விசாரணைகளின் பின்னர், ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். காணாமற்போனோர் தொடர்பில் சுமார் 19,000 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. அவற்றுள் சுமார் 4000 முறைப்பாடுகள் போலியானவை என்பதால், நன்கு ஆராய்ந்த பின்னர் அந்த முறைப்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறினார்

Related posts: