சைட்டம் விவகாரம்: இலங்கை மருத்துவ சபையின் தீர்மானம் குறித்து விசேட கலந்துரையாடல்!

சர்ச்சைக்குரிய மாலபே, சைட்டம் நிறுவனம் தொடர்பில் இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ள தீர்மானம் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளதாக சைட்டம் மருத்துவ கல்லூரி தெரிவித்துள்ளது.
மருத்துவ சபையின் நிலைப்பாடு தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானத்துக்கும் வரவில்லையென அந்நிறுவனத்தின் உயிரியல் துறை பேராசிரியர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது என இலங்கை மருத்துவ சபை நேற்று(17) தீர்மானம் மூலம் அறிவித்திருந்தது. எதிர்வரும் 42 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யவுள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.
Related posts:
தங்கம் கடத்த முயன்ற வெளிநாட்டவர் கைது!
யாழ்.நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை வான் வந்ததால் பதற்றம்!
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே நாட்டின் எதிர்கால இலக்கு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சே...
|
|