சேதங்களை மதிப்பீடு செய்வதில் சிரமம் – நிதி அமைச்சு!
Monday, May 23rd, 2016
நாட்டிலேற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ். அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் –
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –
வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய பொருளாதார ரீதியான மதிப்பீடுகளை மேற்கொள்வது மிகவும் சிரமமான காரியமாகும். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் தொடர்பான விபரங்களை மிகத் துல்லியமாக திரட்ட முடியாதுள்ளது. இன்னமும் வெள்ளம் முழுமையாக குறையவில்லை. எனவே இன்னமும் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்டுள்ள சொத்து சேதம் பற்றிய முழு மதிப்பீடுகள் செய்யப்படவில்லை என அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
காணாமல் போனோர் தொடர்பாக நிரந்தர அலுவலக சட்டம்!
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒற்றுமையும் இன்றியமை ஜனாதிபதி!
பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தை - தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பில்...
|
|
|


