செயலாளர் பதவிகளில் பிரச்சினை – 2 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழு!

Monday, August 12th, 2024

அங்கீகரிக்கப்பட்ட 2 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்சிகளின் செயலாளர் பதவிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எக்சத் லங்கா மகா சபா கட்சி மற்றும் லங்கா மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளின் பிரதிநிதிகளையே அழைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட 6 அரசியல் கட்சிகளின் செயலாளர் பதவிகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீ லங்கா முற்போக்கு முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளிட்ட 06 கட்சிகளின் செயலாளர் பதவிகளில் சிக்கல்கள் காணப்படுவதாக ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts:

இலங்கை - உக்ரேனிய இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ...
நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்ப...
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை...