செங்கலடி பிரதான வீதி சந்தியில் வீதி விபத்து – காயடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
Monday, May 6th, 2024
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை (06) அதிகாலை ஒரு மணியளவில் கல்முனையில் இருந்து மகரகம நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு செங்கலடி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் தூக்கக்கலக்கத்தால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேரு வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதுண்டு வீதியோரம் இருந்த கடைத் தொகுதியிலும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சாரதி மற்றும் நடத்துநர் உள்ளிட்ட ஐவர் செங்கலடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


