சூரன்போர் பார்க்கச் சென்ற சிறுவனுக்கு மரணம்!
 Monday, November 7th, 2016
        
                    Monday, November 7th, 2016
            
சூரன் போர் பார்ப்பதற்கு செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு சென்ற சிறுவன் தொண்டமானாறு கடலில் நீராடி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனந்தகுமார் ஜெயபிரகாஸ் வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.கந்தசஷ்டியின் இறுதி நாளான நேற்று குறித்த சிறுவன் உறவினர் ஒருவருடன் செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு சென்றுள்ளான். இந்நிலையில் உறவினருக்கு தெரியாமல் சிறுவன் அருகில் உள்ள கடலில் சென்று நீராடியுள்ளான்.
இதன்போது, குறித்த சிறுவன் கடலில் மூழ்குவதைக் கண்ட ஏனைய பக்தர்கள் அவனை மீட்டு ஊறணி வைத்தியசாலையில் அனு மதித்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்புடைய மேலதிக விசா ரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
பெரிய வெங்காயத்திற்கு சில்லறை விலை நிர்ணயம்!
தொடர்ந்தும் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் 24 ஆம் திகதி முடக்கப்படும் நாட்டை மீளவும் 27ஆம் திகதி தி...
சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        