சுவீடன் வர்த்தக நிபுணர்கள் இலங்கையில்!
Monday, February 13th, 2017
சுவீடனைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர். சுவீடிஷ் தேசிய வர்த்தக சபையும் இலங்கை வர்த்தக திணைக்களமும் இணைந்து இவர்களை இலங்கைக்கு அழைத்துள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவீடனுக்ககான ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ள, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் புதன்கிழமை உலக வர்த்தக மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
கறுவா, தேயிலை , இயற்கை உணவு பொருட்கள் காய்ந்த தென்னை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், மசாலா வணிக உணவு பொருட்கள தொடர்பிலான , விதிகள் மற்றும் உணவு ஏற்றுமதியின் போது கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடுகள் சுவீடிஷ் சந்தை தகவல் முதலான விடயங்களில் இந்த சந்தி போது கவனம் செலுத்தப்படவுள்ளன.

Related posts:
நாட்டில் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது!
உடுவில் வை.எம்.சி.ஏக்கு ஈ.பி.டி.பி விளையாட்டு உபகரணம் வழங்கிவைப்பு.
வறட்சியான வானிலை - நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் வயல் நிலங்கள் பாதிக்கப்பு - விவசாய அமைச்சு அறிவிப்பு!
|
|
|


