சுவாச அடைப்­பு நோய் குறித்து விழிப்­பு­ணர்வு அவசியம்!

Wednesday, November 16th, 2016

நாட்­பட்ட சுவாச அடைப்பு நோய் குறித்த அறி­யா­மையின் நிமித்­தமும்  அதன் தாக்­கத்­தி­னாலும் பாதிக்­கப்­ப­டு­வோரின் தொகை தொடர்ந்தும் அதி­க­ரித்து வரு­வ­தாக சுவாச நோய்கள் தொடர்­பான விசேட  வைத்­திய நிபுணர் டாக்டர் பந்து குண­சேன தெரி­வித்துள்ளார்.

நாட்பட்ட  சுவாச அடைப்பு  நோயா­னது ஒரு­வ­கை­யான இடை­யூறு செய்­கின்ற நுரை­யீரல் நோயாகும். குறிப்­பாக தடையை ஏற்­ப­டுத்­து­கின்ற சுவா­சத்­தையே குறிக்­கின்­றது. சாத­ார­ண­மாக நாட்­படும் போது இது மேலும் மோச­மான நிலை­யினை அடை­கி­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அதி­க­ரித்­து­வரும் சுவாச நோய்கள் குறித்து தெளி­வு­ப­டுத்தும் ஊட­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை குடும்ப சுகா­தார பணி­ய­கத்தில் இடம்­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இத­னைத்­தெ­ரி­வித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

நோய்­க­ளி­லி­ருந்து விடு­த­லை­பெற்ற நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்கும் நோக்­குடன் அண்­மைக் ­கா­ல­மாக அரசு பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அத்­துடன் தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் குறித்தும் விசேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

நாட்­பட்ட சுவாச அடைப்பு நோய் ஆரம்ப காலங்­களில் பாதி ப்பை ஏற்­ப­டுத்தும் நோய்­களின் வரி­சையில் 20 ஆவது இடத்தில் இருந்­தாலும்  தற்­போ­தைய நிலையில் 4 ஆவது இடத்­திற்கு முன்­னேறி உள்­ள­மையும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. அதுமாத்­தி­ர­மன்றி, 2020 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலைக்கு வருவ­தற்கும் வாய்ப்­புள்­ள­மை எடுத்­துக்­காட்­டத்­தக்­கது.

இன்­றைய கால­கட்­டத்தில் பெரும்­பாலும் சுவாச நோய்கள் தொடர்­பாக மக்­க­ளி­டையே  தெளி­வற்ற  நிலையே காணப்­ப­டு­கின்­றது.  ஆகையால்  நாட்­பட்ட நுரை­யீரல் அடைப்பு  நோய்  தொடர்பில்  மக்கள்  விழிப்­பு­ணர்­வுடன்  செயற்­பட வேண்டும்.

இந்­நோ­ய்க்­கான பிர­தான அறி­கு­றிகள் எனும் போது  சுவா­சிப்­பது மிகு­தி­யா­குதல், வேக­மான இதயத் துடிப்பு,  அதி­க­மாக வியர்த்தல்,  கழுத்து தசை­களின் தோல்­நிறம் மாற்­ற­ம­டைதல், மூச்சுத் திணறல்,  இருமல், சளி என்­பன  முக்­கி­ய­மான அறி­கு­றி­க­ளாகும்.

 இந்­நோ­யினை முன்­கூட்­டியே அறிந்துகொள்ளும் பட்­சத்தில் பாதிப்­பு­களை இயன்­ற­ளவு குறைத்துக்­கொள்ள முடியும்.

நாட்­பட்ட மூச்சுக்குழாய் அழற்­சிக்­கான  முதல்­நிலை கார­ண­மாக புகைத்தல் உள்­ளது. அத்­துடன்  அதி­க­மாக புகைத்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­படும் போது நோயின் நிலை மேலும் தீவி­ர­ம­டை­கின்­ற­மையும்  எடுத்­துக்­காட்­டத்­தக்­கது.

வேலைத்­த­லங்­களில் உள்ள செறி­வூட்டும் தூசு, இர­சா­ய­னங்கள் புகை, இவை­க­ளுடன் நீண்ட நாள் தொடர்­பி­லி­ருந்தால்  புகைப்­பி­டிப்­ப­வ­ரா­யினும் அல்­லா­தா­வ­ரா­யினும் இந்நோய் வரு­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மாகும்.  புற­நகர்ப் பகுதி காற்று மாசும் இதற்கு மிக முக்­கிய கார­ணி­யாகும்.

கிரா­மப்­ப­கு­தி­களை விட நகர்ப் புறங்­களில் காற்று மாசு அதிகம் என்­பதால் நகர்ப் புற மக்­களே பெரும்­பான்­மை­யாக இந்­நோய்க்­குட்­ப­டு­கின்­றனர் என்­பதால் ஒவ்­வொ­ரு­வரும் அறி­கு­றிகள் தென்­ படும் போதே அதனை உரிய வைத்­தி­ய­ரிடம் காண்பித்து சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்துடனான சமூக மொன்றை கட்டியெழுப்ப முடியும் என்றார்.

எல்லாவகையான நோய்களுக்கும் அறியாமையும் ஒரு காரணம் என்பதால் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு மக்களி டையே சரியான முறையில் சென்றடைய வேண்டிய தேவை யுள்ளது எனவும் குறிப்பிட்டார்இதயம்-3

Related posts: