சுற்றுலாப் பயணிகள் சுகாதார சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் – அரச வைத்தியர் சங்கம்
Saturday, April 16th, 2016
இலங்கைக்குள் இந்தியா உட்பட தொற்று நோய்கள் அதிகம் உள்ள நாடுகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் பின்பற்றப்பட்டு வரும் சுகாதார சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என அரச வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இல்லாமல் செய்யப்பட்டுள்ள சில தொற்று நோய்கள் மற்றும் புதிய வகை நோய்கள் இந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் மீண்டும் நாட்டுக்குள் பரவ காரணமாகின்றன.மலேரியா நோய்க்குட்பட்ட இந்தியர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுவரெலியாவில் இனங்காணப்பட்டார்.
இவருக்கு இந்தியாவிலிருந்தே இந்த நோய் ஏற்பட்டுள்ளமை பின்னர் தெரியவந்துள்ளது.இவர் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளதாகவும், இவரது வீசாக் காலம் முடிவடைந்த பின்னரும் இங்கு தங்கியிருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எமது அயல் நாடான இந்தியாவில் பல்வேறு வகையான தொற்று நோய்கள் காணப்படுகின்றன. இதனால், அங்கிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் மிக அவதானத்துடன் இருத்தல் வேண்டும் எனவும் அச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|
|


