சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதி!

நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்தில் காயமடைந்த டச்சு வீதி சாவகச்சேரியைச் சேர்ந்த எம். தாளினி (வயது-26) என்ற யுவதியே யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி யுவதி சிறியரக வானொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.
இதனால் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட இவ் யுவதியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
மெனிங் பொதுச்சந்தைக்கு பதிலாக புதிய பொதுச்சந்தை - பஷில் ராஜபகக்ஷ தெரிவிப்பு!
சுவிஸிலிருந்து நிதி - செல்வபுரத்தில் வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் 6 பேர் கைது!
எயார் பிரான்ஸ் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை!
|
|