சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!
Tuesday, May 3rd, 2016
சுன்னாகத்தில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வட மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு இன்றைய தினம் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
வடமாகாண சபையின் பிரதம செயலாளருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் ஆஜராகுமாறு மல்லாகம் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யசிங்கம் , சோ.தேவராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாமினர் நீதவான் முன்னிலையில் ஆஜராகினர்.
Related posts:
துறைமுக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு - இலங்கை துறைமுக அதிகாரசபை!
பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடு - யாழ் பல்கலையின் 19 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
மேலதிக நீரை விநியோகிக்க முடியாது - மின்சார சபைக்கு அறியப்படுத்தியது மகாவலி அதிகார சபை!
|
|
|


