சுன்னாகம் பகுதி மக்கள் அதிருப்தி!
 Thursday, April 13th, 2017
        
                    Thursday, April 13th, 2017
            உடுவில், சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட புலம்பெயர் தமிழர் ஒருவர் தனக்கு சொந்தமான காணிகளை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
குடியிருப்புக்கு மத்தியில் அமையப் பெற்றுள்ள குறித்த காணியை, அந்த பகுதியில் பூர்வீகமாக வாழந்து வரும் மக்கள் கோரிய போதிலும், அதற்கு காணி உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனக்கு சொந்தமான 14 பரப்பு காணியை பொலிஸ் நிலையம் அமைப்பதற்கே வழங்கப் போவதாக காணி உரிமையாளரான புலம் பெயர் தமிழர் கூறியுள்ளார்.
இந்நிலையில், குறித்த காணியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டால் தமது வாழ்வியல் நிச்சயமாக பாதிக்கப்படும் என அந்த பகுதி மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த புலம் பெயர் தமிழர் ஒருவரும் தனக்கு சொந்தமான காணியை பொலிஸ் நிலையம் அமைக்க வழங்கியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில், தனக்கு சொந்தமான காணியை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்குவதற்கு மற்றும் ஒரு புலம்பெயர் தமிழர் முன்வந்துள்ளமை அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சுமணன் என்ற இளைஞர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சர்ச்சையிலும், சுன்னாகம் பொலிஸ் நிலையம் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        