சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைது!

விமான நிலைய சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.
அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவசர கோரிக்கை!
தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – பல்கலைக்கழக மானிய...
ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது – திட்டவட்டமாக அரசாங்கம் அறிவிப்பு!
|
|