சுகாதார விதிமுறை மீறல் கடலுணவுகள், மாம்பழங்கள் மானிப்பாய் சந்தையில் அழிப்பு!
Tuesday, December 20th, 2016
சுகாதார விதிமுறைக்கு முரணான வகையில் தரையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகையான கடலுணவுகளையும், மருந்து விசிறிய மாம்பழங்களையும் கைப்பற்றிய சண்டிலிப்பாய் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வியாபாரிகளை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று முன்தினம் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மானிப்பாய் மத்திய சந்தையில் சுகாதார விதிமுறைகளுக்கு எதிராக செயற்படுவதாக பொதுச்சுகாதார பரிசோதகருக்கு முறையி;டப்பட்டது. அங்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தரையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகையான கடலுணவுகள், மாம்பழங்களைக் கைப்பற்றி புதைத்து அழித்தனர். இதனை முன்கூட்டியே அறிந்திருந்த மாம்பழ வியாபாரி மாம்பழங்களை விட்டுவிட்டு ஓடி ஓழிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related posts:
அலவாங்கால் தாக்கப்பட்ட இளம் குடும்பத் தலைவர் சாவு - கொலைக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
போதையில் சாரத்தியம் இருவருக்கு ரூ. 6000 தண்டம்!
நாடாளுமன்றுக்கு அதிக பாதுகாப்பு அவசியம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா வலியுறுத்து!
|
|
|
வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் கட்டாயம் - பிரதி பொலிஸ் மாஅதிபர் ...
நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறி - விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் சுட்டிக்காட்டு!
மின்சார கட்டணம், நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள், தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவச...


