சுகாதார சீர்கேடுடன் இயங்கி வந்த ஜஸ்கிறீம் விற்பனை  நிலையம் சீல் !

Tuesday, March 20th, 2018

பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிய ஜஸ்கிறீம் விற்பனை நிலையம் பருத்தித்துறை நீதிமன்றின் கட்டளையின் படி பொது சுகாதார பரிசோதர்களால் சீல் வைத்து மூடப்பட்டது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதாரப் பரிசோதர் சுதாகரனுடன் இணைந்து கடந்த மாதம் மேற்கொண்ட குழுப்பரிசோதனையில் குறைபாடுகள் இனங்கானப்;பட்ட பதினொரு உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக நீதி மண்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டது .ஒரு உணவு கையாளும் நிலையத்தின் குறைபாடுகள் திருத்தப்படும் வரை அதற்குச் சீல் வைக்க மன்று உத்தரவிட்டது .

இதேவேளை பருத்தித்துறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனாட்டினால் சுகாதார நடைமுறைகளுக்கு முரணாக உணவுப் பொருட்களைக் கையாண்ட நடமாடும் ஜஸ்கிறீம் விற்பனையாளர் நடமாடும் வெதுப்பக உற்பத்தி விற்பனையர் ஆகியோரிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு   வழக்குகள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன .அதில் மூன்று பேரிற்கு மொத்தமாக ஏழாயிரம் ரூபா குற்றப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதுடன் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.

Related posts: