சுகாதார அமைச்சின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Friday, October 28th, 2016

சுகாதார அமைச்சில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பள உயர்வுக் கோரி சுகாதார அமைச்சின் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த அமைச்சில் ஒரே திணைக்களத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு சுகாதார அமைச்சுக்குள்ளேயே திணைக்கள இடமாற்றம் வழங்கப்பட்டது.

ஆனால் குறித்த ஊழியர்கள், இடமாற்றம் வழங்கிய திணைக்களத்தில் பணியாற்றாமல் கடந்த 5 வருடங்களாகப் பணியாற்றிய திணைக்களத்திலேயே பணியாற்றியுள்ளனர். இதனால், இடமாற்றத்தை மீறி அதே திணைக்களத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்தை சுகாதார அமைச்சு வழங்கவில்லை.

இதன் காரணமாகவே தங்களது இம் மாத சம்பளத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக சுகாதார அமைச்சு அமைந்துள்ள பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ministry-of-health

Related posts:

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பௌத்தர்களின் உயர்ந்த பண்பினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு கிடைத்த சிறந...
டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங...
பண்டிகைக் காலங்களில் பட்டாசுகளால் 36 வீதமான விபத்துகள் ஏற்படுகின்றன – அதிக கவனம் செலுத்துமாறு அரசாங்...

நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கு தேவையாக உள்ளது - சுதந்த...
உங்கள் குடும்பங்களை நீங்களே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் – மன்னார் மாவட்ட வைத்திய தொற்ற...
ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் - மக்களே அவதானம் என எச்சரி...