சீன சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு!

இவ்வாண்டு செப்டம்பர் வரையில் இலங்கைக்கு 2 இலட்சம் சீன சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்களைச் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. சென்ற மாதத்தில் மட்டும் 18ஆயிரம் சீனர்கள் இலங்கைக்கானசுற்றுலாப்பயணிகளாக வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேவேளை இலங்கைக்கு இந்த ஆண்டில் 1.5மில்லியன்சுற்றுலாப்பயணிகள் வருகைதந்ததாகஅமைச்சு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இவ்வருட இறுதிக்குள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2.5மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் அமைச்சு எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் வருகை வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தையும்இ பிரித்தானியா மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன. இதற்கிடையில் இந்த ஆண்டில் மாத்திரம் சுற்றுலாப்பயணிகள் மூலம் 2 பில்லியன் அமரிக்க டொலர்கள் இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|