சீனா தயாரிப்புக்கள் தொடர்பான கண்காட்சி!
Monday, October 31st, 2016
சீன வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள சீனா நாட்டின் தயாரிப்புக்கள் தொடர்பான சர்வதேச கண்காட்சியொன்று அடுத்த மாதம் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரை இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
120 முன்னணி சீன நிறுவனங்கள் பங்குபற்றும் இந்த கண்காட்சிக்கு இலங்கை வர்த்தக சபை அனுசரணை வழங்கின்றது.
இந்த கண்காட்சியின் மூலம் இலங்கையின் வர்த்தக நிறுவனங்கள், சீன நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்திற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக தேசிய வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

Related posts:
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்!
மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...
உள்ளூராட்சித் தேர்தல் நடந்தால் பொருளாதாரப் பிரச்சினை தீருமா - அமைச்சர் பந்துல குணவர்த்தன கேள்வி!
|
|
|


