சிறுவர்கள் தடுப்பு முகாமில் வாழ்வது கவலைக்குரியது : மேற்கு ஆஸ்திரேலியா முதல்வர்!
Thursday, August 18th, 2016
நவுறு புகலிடக்கோரிக்கையாளர் தடுப்பு முகாமிலுள்ள குடும்பங்களை உள்வாங்க மேற்கு அவுஸ்திரேலியா தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் Colin Barnett தெரிவித்துள்ளார் என செய்திக்ள தெரிவித்துள்ளன.
கடல்கடந்த தடுப்பு முகாமிலுள்ள எவரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசு தனது முடிவினை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பங்களை மேற்கு அவுஸ்ரேலிய மாநிலத்தில் குடியமர்த்த தாம் தயாராக உள்ளதாக முதல்வர் Colin Barnett தெரிவித்தார். சிறுவர்கள் தடுப்பு முகாமில் வாழ்வது கவலைக்குரிய விடயம் எனக் குறிப்பிட்ட அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத குடும்பங்களை குடிமர்த்துவதில் எவ்வித சிக்கலும் இருக்காது எனவும் அவர் தெரிவித்தள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் விமான விபத்தில் 75 பேர் உயிரிழப்பு!
வட கொரியாவை சீண்டவேண்டாம் - உலகமே அழிந்துவிடும் எச்சரிக்கிறார் அந்நாட்டின் கௌரவ குடிமகன்!
புத்தாண்டுமுதல் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
|
|
|


