சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிருங்கள் – பெற்றோர்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை!
Sunday, November 26th, 2023சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் அவர்களை பாடசாலை, முன்பள்ளி மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் சுகாதாரத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் பல வைரஸ்களின் கலவையாக இந்த நோய் நிலைமைகள் ஏற்படலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களுக்கு கட்டாயமாக முகக்கவசங்களை அணிவிக்க வேண்டுமென அவர் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
8 மொழிகளில் தமிழ் மட்டும் இல்லை - பிமல் ரட்னாயக்க எம்.பி!
25000 ரூபா கையூட்டல்: தொழில் திணைக்கள அதிகாரிக்கு 10 வருட சிறை !
அரிசி, பருப்பு விலைகள் குறைப்பு!
|
|
|


