சிறந்த ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியும் – நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன!

Tuesday, October 3rd, 2017

நாட்டில் வாழும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில் முரண்பாடுகளை தீர்த்து சிறந்த ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தயாரிக்கப்படும் ஒரு அரசியல் யாப்புக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுமக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன இந்த விடயங்களை குறிப்பிட்டார். பிளவுபடாத நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு, இறையாண்மைக்கு அல்லது ஆட்புல இறைமைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது என்று சுட்டிக்காட்டிய் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன  அரசியலமைப்பு குழுவினால் வெளியிடப்பட்ட உத்தேச புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருவதாக் தெரிவித்தார்.

இப்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்கு மிகவும் திருத்தமான ஒரு சூழலை ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், புத்த சமயம் அரச சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமையில் எதுவித மாற்றமும் இல்லை. பொய்யான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு சில தரப்பினர் முயற்சித்துவருவதாக  பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன மேலும் தெரிவித்தார்.

Related posts: