சினிமாப் பாட்டுப் பாடியவரை துரத்திக் கடித்த நாய்கள்!

மதுபோதையில் சினிமாப் பாடல்களைப் பாடியவாறு வீதியில் சென்ற குடும்பத் தலைவரை மூன்று நாய்கள் துரத்திக் கடித்துக் குதறியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தென்மராட்சிப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது. நாய்களால் கடியுண்டவர் (வயது 58) பலத்த காயங்களுடன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது ஒருபுறமிருக்க அந்த நாய்களின் உரிமையாளர்கள் சிக்கலில் மாட்டியுள்ளனர். பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கடிநாய்களைக் கட்டி வளர்க்காமல் வைத்திருந்தனர் என்றும் அதனால்தான் வழிப்போக்கரை நாய்கள் கடித்துக் குதறின என்றும் அவர்கள் மீது பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
ஜேர்மன் நாட்டு யுவதி ஆபத்தான நிலையில்!
வருட இறுதிக்குள் ரூபாவின் பெறுமதி நிலையான மட்டத்தை அடையும் - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்!
பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் : இராணுவத் தளபதி தெரிவிப்பு!
|
|