சிகரெட் விற்பனையால் வரி வருமானம் வீழ்ச்சி!

சிகரெட் விலையை உயர்த்தியதன் பின்னர் சிகரெட் விற்பனை வருமான வரி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதனடிப்படையில் சுமார் 200 கோடி ரூபா மாதாந்த வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக திறைசேரி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிகரெட் விலை உயர்த்தப்பட முன்னதாக மாதாந்த வரி வருமானம் 800 கோடி ரூபாவாக காணப்பட்டது. தற்போது இந்தத் தொகை 600 கோடி ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், தற்போது வருடாந்தம் சிகரெட் விற்பனை ஊடாக அரசாங்கம் 9600 கோடி ரூபா வருமானம் ஈட்டுகின்றது. இந்தத் தொகை இனி வரும் காலங்களில் 7200 கோடி ரூபாவாக வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகிறது. விலை ஏற்றத்தின் பின்னர் சிகரெட் விற்பனை 15 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
Related posts:
மூன்று புதிய வங்கிகள்!
நுளம்புக் குடம்பிகளை அழித்தொழிக்க யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் புதிய நடவடிக்கை!
அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரிப்பு - விமான பயணச் சீட்டுக்களின் விலையும் சடுதியாக வீழ்ச்சி!
|
|