சிகரட்டுகள் கடத்தி வந்த நபரொருவர் கைது!
Sunday, October 16th, 2016
சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இலங்கைக்கு சிகரட்டுக்களை கொண்டுவந்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து இலங்கைக்கு இன்று காலை 3 மணிக்கு வருகை தந்த விமானத்திலே குறித்த நபர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சந்தேகநபர் தனது பயணப்பையில் 35 ஆயிரத்து 800 சிகரட்டுக்களை கொண்டு வந்துள்ளதாகவும் அதன் பெறுமதி 15 இலட்சம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு மாளினாவத்தையினை சேர்ந்த 38 வயதுடைய நபர் என்றி கண்டறியப்பட்டுள்ளது.

Related posts:
நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை உருவாக்கும் நோக்கில் குழு நியமனம்!
திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை - கல்வி அமைச்...
|
|
|


