சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் குரங்குகளால் பெரும் தொல்லை!

Wednesday, March 1st, 2017

சாவகச்சேரி வைத்தியசாலையில் குரங்குகளின் அட்டகாசத்தால் கட்டடக் கூரையின் அடித்தளத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் சாவகச்சேரி வைத்தியசாலை 6ஆம் விடுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

விடுதியில் உள்ள மருத்துவர் ஓய்வு அறையில் தங்கியிருந்த மருத்துவர் நோயாளி ஒருவரை பார்வயைிடச் சென்ற வேளையில் விடுதிக் கட்டடத்தினுள் சுமார் 25 குரங்குகள் கூரையின் அடித்தளத்துக்குள் புகுந்துள்ளன. அவை அங்கு பாய்ந்து திரிந்துள்ளன. அப்போது மருத்துவரின் அறையின் தட்டைத் தகட்டின் மீது பாய்ந்த போது அங்கு பொருத்தப்பட்டிருந்த கம்பி வளைந்து அனைத்து தட்டைத் தகடுகளும் உடைந்து அறைக்குள் விழுந்தன.

கடமையிலிருந்த மருத்துவர் உள்ளிட்ட பணியாளர் ஓடிவந்து பார்த்தபோது அறைக்குள் நொருங்கிய நிலையில் தகடுகள் காணப்பட்டன. எனினும் குரங்குகள் வெளியே பாய்ந்து சென்றுவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் உள்ள மருத்துவர்களின் வதிவிட விடுதிக்குள் நுழைந்த குரங்குகள் அங்கும் அட்டகாசம் புரிந்ததில் மருத்துவ அதிகாரியின் விடுதியின் பல தட்டைத் தகடுகள் உடைந்து நொருங்கின என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டடம் அமைக்கப்பட்ட போது அறைகளின் தட்டைத் தகடுகள் மரங்களுக்கு பதிலாக கம்பிகளில் பொருத்தப்பட்டதால் குரங்குகளின் பாரம் தாங்காமல் அவை உடைந்து போயுள்ளன என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

Chavakacheri_Hospital_95861

Related posts: