சாவகச்சேரி பொதுச் சந்தையில் பழுதடைந்த கடலுணவுகள் விற்பனை என குற்றச்சாட்டு!

Thursday, March 8th, 2018

சாவகச்சேரி பொதுச் சந்தையின் கடலுணவுகள் விற்பனைப் பிரிவில் பழுதடைந்த கடலுணவுகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் பிரதேச மக்கள் தெரிவித்ததாவது:

சந்தையில் சுகாதாரப் பகுதியினரின் கண்காணிப்பு இல்லாததால் தினமும் குளிரூட்டப்பட்ட நிலையில் பழுதடைந்த கடலுணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

சாவகச்சேரி சந்தைக்கு தென்மராட்சி பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் கடலுணவுகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பிரதேசத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் கடலுணவு கொள்வனவு செய்வதற்காக வருகின்றனர்.

பாவனைக்கு உதவாத பழுதடைந்த மீன்களுக்கு இரத்தம் பூசி வியாபாரிகள் விற்பனை செய்வதால் அதனை வாங்கிச் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். அதிக விலைகொடுத்து வாங்கியும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts: