சாவகச்சேரியில் மோட்டார்ச் சைக்கிள்- துவிச்சக்கர வண்டி விபத்தில் 82 வயது முதியவர் உயிரிழப்பு !

யாழ்.சாவகச்சேரியில் இன்று செவ்வாய்க்கிழமை(07) இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள்- துவிச்சக்கர வண்டி விபத்தில் 82 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகச் சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர் .
இன்று காலை- 09 மணியளவில் ஏ- 9 பிரதான வீதியின் கல்லடிச் சந்தியில் இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 82 வயதான முதியவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
பொலிஸாரின் அதிரடி அறிவித்தல்!
இராணுவத்துடன் கேப்பாபுலவு மக்கள் சந்திப்பு!
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுக...
|
|