சாரதிகளை உள்ளீர்க்க அமைச்சர் இணக்கம்!

சுகாதகாரத் திணைக்கள சாரதிகளின் நேற்றைய போராட்டத்தையடுத்து அவர்களைச் சுகாதாரத் திணைக்களத்துக்குள் உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அகில இலங்கை இணைந்த சுகாதாரத் திணைக்கள சாரதிகள் சங்கத்தினர் அநூராதபுரத்தில் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் யாழ்ப்பாண மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தில் பணிபுரியும் சாரதிகள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். தமது கோரிக்கையைச் சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனையடுத்து தாம் பணிக்குத் திரும்பியதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சுகாதாரத் திணைக்களக் கள சாரதிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Related posts:
புதுவருடத்தை முன்னிட்டு மின்தடை ரத்து!
ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள விசேட பிரதிநிதிகள் பிரசல்ஸ் பயணம்!
உருமாறிய பிரித்தானிக் கொரோனவால் நாட்டு மக்களுக்கு ஆபத்து இல்லை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்...
|
|