சாரதிகளுக்கு பொலிஸ்பிரிவின் அறிவுறுத்தல்!

Friday, October 28th, 2016

போக்குவரத்தை மேற்கொள்ளும்போது கூடுதலான கவனத்துடன் இருக்கவேண்டும்  என வாகன சாரதிகளுக்கு முல்லைத்தீவு மாங்குளம் வீதிப்போக்குவரத்து பொலிஸ்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 9 மாத காலங்களில் போக்குவரத்துகளில் தவறிழைத்த சாரதிகளிடம் இருந்து குறித்த பொலிஸ் பிரிவினால் அறவிடப்பட்ட தண்டப்பணத்தின் மொத்த தொகை இருபத்தியெட்டு இலட்சத்திற்கு அதிகமாகும் எனவும், இதனால் அரசிற்கு மிகப்பெரிய வருமானம் கிடைத்துள்ளதாகவும் மாங்குளம் பொலிஸ் நிலைய வீதிப்போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கூறுகையில்,

வாகன விபத்துக்களில் அதிகமானோர் சிக்குவதற்கு காரணம், வாகனத்தை செலுத்துபவர்கள் வீதி ஒழுங்குகளை சரிவர கடைப்பிடிக்காமையாகும் என்றும் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பயணிப்போரே இவ்வாறன தவறுகளை அதிகம் செய்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வீதி விபத்துக்களை தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் அனைத்து சாரதிகளும் விழிப்புடனும், பொறுப்புடனும் வாகனங்களை செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

tkn-09-02-rm-59-pgi-1 copy

Related posts: