சவுக்கு காடுகள் தீயில் எரிந்து நாசம்!

வடமராட்சி மணற்காடு பிரதேசத்தில் 4 ஏக்கர் சவுக்கு காடுகள் கடந்த திங்கட்கிழமை (04) மாலை ஏற்பட்ட தீ விபத்தால் அழிவடைந்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், நேற்று (05) தெரிவித்துள்ளார்.
சவுக்கு காட்டில் ஏற்பட்ட தீயை யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அணைத்தமையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் விசமிகள் சிலர் வேண்டுமென்றே தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சவுக்கு விறகுகள் எடுப்பதற்காக சவுக்கு காடுகளை தீவைத்து எரிக்கும் சம்பவம் அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்குப் பகுதியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடு இலங்கைக்கு 112ஆம் இடம்!
உயர் பெறுமதியினை அடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை !
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வழங்கிய புதிய நியமனம்!
|
|