சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி இலங்கை வருகை – நிதி அமைச்சு தகவல்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 7ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். நிதி அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு மூன்றாம் கட்ட கடனை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு!
வருட இறுதிக்குள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு - மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெர...
டெங்கு அபாயத்தில் பல மாவட்டங்கள் – கடும் எச்சரிக்கை விடுக்கிறது தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!
|
|