சர்வதேச கடற்பரப்பில் கப்பல்களுக்கான பாதுகாப்பு கடற்படையினரால் வழங்கப்படும்!

Friday, September 23rd, 2016

சர்வதேச கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்களுக்கான பாதுகாப்பு கடற்படையினரால் வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கப்பல்களுக்கான பாதுகாப்பு வழங்கும் பணிகளை கடற்படையினரே மேற்கொள்வார்கள் எனவும், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

பாதுகாப்பு வழங்குவதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் அரசாங்கத்திற்கு கிடைக்கின்றது. நாட்டிலிருந்து ஆயுதங்களை வெளியே எடுத்துச் செல்வதும், வெளியே இருந்து நாட்டுக்குள் ஆயுதங்களை கொண்டு வருவதும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.

இதனால் தனியார் நிறுவனங்களிடம் சர்வதேச கடற்பரப்பில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணி ஒப்படைக்கப்படவில்லை. சர்வதேச கடற்பரப்பில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணிகளை கடற்படையினர் சிறந்த முறையில் மேற்கொள்கின்றனர்.

இந்து சமுத்திரத்தில் மீன்பிடியில் ஈடுபடும் கப்பல்களுக்கான பாதுகாப்பை வழங்கும் பணிகள் மட்டும் அவன் கார்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அவன் கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒன்பது உடன்படிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மீன்பிடி கப்பல்கள் மற்றும் ட்ரோலர் படகுகளுக்கான பாதுகாப்பு வழங்கும் பணிகள் தொடர்ந்தும் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. படைவீரர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதனால் இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்

Untitled-20

 

 

Related posts: