சம்பந்தனை கொலை செய்ய 25 மில்லியனில் கூலிப்படை: பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறையீடு!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனை கொலை செய்வதற்கு ரூ 25 மில்லியனுக்கு கூலிப்படை அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை செய்து பழியை புலிகள் மீது சுமத்த திட்டமிடப் பட்டுள்ளதாகவும் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தகவல் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே எழுகதமிழ் நிகழ்வின் பின் முதலமைச்சர் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாகவும் அதனை புலிகள் மீது சாட்டுவதற்கு முயற்சிகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த குற்றசாட்டினை அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோப் குழு நடவடிக்கைகள் இன்றுமுதல் ஊடகங்களுக்கு!
அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் – கதவு திறந்...
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்!
|
|