சமுர்த்தி உள்ளிட்ட மானியங்களுக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு – நலப்பணிகள் திணைக்களம் அறிவிப்பு!
Friday, October 28th, 2022
சமுர்த்தி மற்றும் ஏனைய அரச மானியங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதன் கீழ் முதியோர், சிறுநீரக பாதிப்பு மற்றும் இதர ஊனமுற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக நலப்பணிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது உரிய மானியங்களைப் பெறுபவர்களுக்கு விண்ணப்பம் அனுப்புவது கட்டாயம் என்று சமூக நல திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய உற்பத்தி மற்றும் விவசாய உதவியாளர் என தமது பிரதேசத்திலுள்ள எந்தவொரு உத்தியோகத்தர் ஊடாகவும் உரிய விண்ணப்பங்களை பிரதேச செயலகத்தில் கையளிக்க முடியும் என சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இடமாற்றப்படும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள்!
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்!
வணிக வங்கிகள் இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக குறுஞ் செய்தி!
|
|
|


