சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐவர் கைது!

யாழ். நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐவர் நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் நேற்றுப் பகல் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது பொலிஸாரைக் கண்டதும் தப்பி ஓடியவர்கள், ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தத் தவறியவர்கள், முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்தவர்கள் என ஐவர் கைது செய்யப்பட்டுத் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Related posts:
அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட அவசர உதவிப்பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன!
இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி!
அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன் - முடியாவிட்டால் விலகி செல்வேன் - பிரதமர் ...
|
|