சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்றவருக்கு அபராதம்!
Saturday, March 12th, 2016
அனுமதிப் பத்திரமின்றிச் சட்ட விரோதமான முறையில் அரச மதுபானப் போத்தல்களை விற்பனை செய்த ஊரெழுவைச் சேர்ந்த இளைஞரொருவருக்குப் பத்தாயிரம் ரூபா அபராதத்துடன் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிசாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் (10) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபரான இளைஞனைக் கடுமையாக எச்சரித்த நீதவான் ஏ. யூட்சன் அவருக்கு அபராதத்துடன் மேற்படி சிறைத்தண்டனையையும் விதித்து உத்தரவிட்டார்.
Related posts:
சேமநலனுக்கு பிரதேச சபை நிதியை பயன்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம்!
தபால்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை - நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினர் கோரிக்கை!
தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர் – நாட்டின் தற்...
|
|
|


