சட்ட விரோதமான முறையில் ஏழு ஆமைகளைப் பிடித்து வைத்திருந்த யாழ். பாசையூரைச் சேர்ந்த ஐவரிற்கு அபராதம் !
Tuesday, March 28th, 2017
சட்ட விரோதமான முறையில் ஏழு ஆமைகளைப் பிடித்து வைத்திருந்த யாழ். பாசையூரைச் சேர்ந்த ஐவரிற்கு ஒரு இலட்சம் ரூபாவை அபராதமாக விதித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் சி. சதீஸ்தரன் நேற்றுத் திங்கட்கிழமை(27) உத்தரவிட்டார்.
யாழ். மண்டைதீவு கடற்பகுதியில் ஏழு ஆமைகளைப் பிடித்து உடைமையில் வைத்திருந்த ஐவரைக் கடந்த ஜனவரி மாதம் கடற்படைப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
சந்தேகநபர்கள் ஐவருக்கும் எதிராக நேற்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரம் நீதிமன்றில் வாசிக்கப்பட்ட போது சந்தேகநபர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து மேற்கண்ட அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாடு செல்லும் பணிப்பெண்களின் வயதெல்லையில் மாற்றம்!
பாடசாலை செல்லாத சிறுவரைத் தேடும் நெல்லியடி பொலிஸ்!
இலங்கையின் சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஆபத்து இல்லை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெ...
|
|
|


